Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெட் அலார்ட் : முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும்?

ரெட் அலார்ட் : முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும்?
, வெள்ளி, 5 அக்டோபர் 2018 (11:50 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து அக்டோபர் 7-ந்தேதி மிக அதீத கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 

 
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ஒரு பக்கம் இதை செய்தாலும், பொதுமக்கள் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற தகவல்கள் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஒருவகையில் அனைத்தும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. இன்னும் 3 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
 
  • மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே மோட்டர் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்
     
  • மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்
  • செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள்
     
  • பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.
     
  • இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள்.
     
  • பிஸ்கட், பால், அவசர மாத்திரைகள், தண்ணீர் கேன், பேட்டரி செல்கள், மெழுகுவர்த்தி, காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
     
  • குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்
     
  • குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்
     
  • கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்
     
  • இடி மின்னல் நேரங்களில் தொலைக்காட்சி பார்க்காதீர்கள்
     
  • பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள்
     
  • மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்
     
  • மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே எச்சரிக்கையாக சாலைகளை கடந்து செல்லுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெட் அலர்ட் என்றால் என்ன ? - தெரிந்து கொள்ளுங்கள்