முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரது காவல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரது காவலை நீட்டிக்க்க வேண்டும் என நீதிமன்றத்தில் காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டிப்பு என விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டதால் மீண்டும் சந்திரபாபு நாயுடு சிறை சென்றுள்ளார்.