Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’அம்மா உணவகம்’ போல் ‘அண்ணா உணவகம்’.. சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்ட 5 கோப்புகள்..!

Advertiesment
Chandra Babu Naidu

Siva

, வெள்ளி, 14 ஜூன் 2024 (07:39 IST)
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்த நிலையில் சமீபத்தில் முதல்வராக அவர் பதவியேற்று கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் முதல்வராக அவர் பதவி ஏற்றவுடன் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. முதலாவதாக ஆந்திரா அரசில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவது, இரண்டாவது ஆக நில உரிமை சட்டத்தை ரத்து செய்வது ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதனை அடுத்து முதியோருக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதை 4000 ஆக உயர்த்துவது, திறன் கணக்கெடுப்பை நடத்துவது ஆகிய கோப்பிலும் அவர் கையெழுத்து விட்டார்.

இதனை அடுத்து ஐந்தாவது அவர் ஆந்திரா முழுவதும் அண்ணா உணவகங்களை திறப்பது தொடர்பான கோப்பிலும் கையெழுத்திட்டு உள்ளார். தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அம்மா உணவகம் திறக்கப்பட்டது போல், 2016 ஆம் ஆண்டு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அண்ணா உணவகங்களை திறந்தார். அங்கு  5 ரூபாய்க்கு உணவுகள் வழங்கப்பட்ட நிலையில் ஜெகன் மோகன் ஆட்சியில் அவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அண்ணா உணவகங்களை ஆந்திரா முழுவதும் திறக்கும் கோப்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.எல்.ஏ பதவியேற்ற மறுநாளே ராஜினாமா.. என்ன ஆச்சு சிக்கிம் முதல்வர் மனைவிக்கு?