முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி மது, கஞ்சா, அசைவ உணவுகளின் கூடாரமாக மாறிவிட்டது என்றும் தெலுங்கு தேச அரசு அதை தூய்மையாகும் என்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சராக நேற்று சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்ற பின்னர் அவர் இன்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். இதனை அடுத்த அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயில் வணிகமயமாக்கப்பட்டுள்ளது என்றும் இனி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் தரமானதாகவும் விலை ஏற்றப்படாமலும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தரிசன டிக்கெட் கள்ள சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார். மேலும் திருப்பதி என்ற புனிதமான இடத்தை கடந்த ஆட்சியில் கஞ்சா மது அசைவ உணவுகளையும் கூடாரமாக மாற்றிவிட்டனர் என்றும் தெலுங்கு தேச அரசு அதை தூய்மையாக்கும் என்றும் தெரிவித்தார்.
விவிஐபி தரிசனத்தில் தனது குடும்பத்தினரிடம் ஏழுமலையானை தரிசனம் செய்த சந்திரபாபு நாயுடுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது என்பது சிறப்பு பிரசாதம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.