ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரில் அம்மாரில முதலவர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வைத்தார், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்தார் ஆனால், எதற்கும் பலனில்லை.
எனவே, 2019ல் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏப்ரல் 20 ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்த வழங்க வேண்டும் என்று ஆலும் கட்சியான தெலுங்குதேசம் மற்றும் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.