Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்களை பாஜகவுக்கு எதிராக திரட்டியதே நீங்கதானே..! சந்திரபாபு, நிதிஸ்க்கு எமோஷனல் பிட் போடும் ஆம் ஆத்மி!

Nithis Kumar, Chandrababu Naidu

Prasanth Karthick

, புதன், 5 ஜூன் 2024 (09:39 IST)
மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க பாஜக திட்டமிட்டு வரும் நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஸ் குமாரின் ஆதரவை பெற இந்தியா கூட்டணி முயன்று வருகிறது.

Nithis Kumar, Chandrababu Naidu


இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. அதேசமயம் பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஸ்குமாரின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க காங்கிரஸும் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் 2019ல் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் இணைய அழைப்பு விடுத்தவர் சந்திரபாபு நாயுடு. அதுபோல 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி உருவாக காரணமாக அமைந்தவர் நிதிஸ் குமார். தற்போது இருவருமே பாஜக கூட்டணியில் உள்ள நிலையில் இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்தால் அதை பரிசீலிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் எக்ஸ் தளத்தில் இதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சரத் பரத்வாஜ், “2019ம் ஆண்டில் மோடிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் சந்திரபாபு நாயுடு ஒன்று சேர்த்தார். 2024ம் ஆண்டில் நிதிஸ்குமார் பாஜகவுக்கு எதிராக அனைவரையும் ஒன்று சேர்த்தார். தற்போது அவர்கள் கையில்தான் எல்லாமே உள்ளது” என்று கூறியுள்ளார்.

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை உள்ளதால் மத்திய அரசியல் வட்டாரமே பரபரப்புடன் காணப்படுகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று 4000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. இன்றைய நிலை என்ன?