சண்டிகர் மேயர் திடீர் ராஜினாமா.. தேர்தல் முறைகேடு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!

Siva
திங்கள், 19 பிப்ரவரி 2024 (07:20 IST)
பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர் என்பவர் சண்டிகர் மேயராக தேர்வு செய்யப்பட்ட விதம் சர்ச்சையை கிளப்பியதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் சண்டிகர் மாநகராட்சி மேயர் பதவியை மனோஜ் சோன்கர் திடீரென ராஜினாமா செய்தார்  
 
சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி திருத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்த நிலையில் இந்த தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக இந்த தேர்தல் வழக்கு குறித்த விசாரணையின்போது இப்படியா தேர்தல் நடத்துவது? என சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். 
 
மேலும் அவர் தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை திருத்தியுள்ளது வெளிப்படையாக தெரிகிறது என்றும்,  இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்றும், இது ஜனநாயக படுகொலை என்றும், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி  மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என  தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
 
 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

2 வாரம் லீவு எடுத்த மழை! அப்புறம் தொடங்கப்போகும் அதிரடி!

சீனாவை அடக்க புது ப்ளான்! ஜப்பானோடு கைக்கோர்த்த அமெரிக்கா! - என்ன டீலிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments