Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 நாள் ஐரோப்பா பயணம், 25 நிகழ்ச்சிகள்..! – புறப்பட்டார் பிரதமர் மோடி!

3 நாள் ஐரோப்பா பயணம், 25 நிகழ்ச்சிகள்..! – புறப்பட்டார் பிரதமர் மோடி!
, திங்கள், 2 மே 2022 (08:30 IST)
பல்வேறு நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளுடனான பொருளாதார உறவை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடி ஐரோப்பா புறப்படுகிறார்.

கொரோனாவுக்கு பிந்தைய காலம் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் ஆகியவற்றால் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவிலும் இந்த நிலை உள்ளது.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கு தனது சுற்றுபயணத்தை தொடங்குகிறார். இந்த பயணத்தில் 3 நாட்களில் 25 நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஐரோப்பா பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் எனது ஐரோப்பிய பயணம் அமைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைப்பு உணர்வை வலுப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுவானில் திடீரென குலுங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்: 12 பயணிகள் காயம்!