Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை: முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்?

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (07:54 IST)
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லி பஞ்சாப் ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு, விவசாயிகள் பிரதிநிதிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் பேச்சுவார்த்தையில் விவசாயிகள் திட்டவட்டமாக  கூறியதை அடுத்து பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை 
 
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளை அழைத்து உள்ளதாகவும் இந்த அழைப்பை அல்லது ஏற்பதா என்று விவசாயிகள் சங்கங்கள் கலந்து ஆலோசித்து இன்று முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
நேற்று காணொளி மூலம் விவசாயிகள் சங்க தலைவர்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்ததாகவும் இந்த பேச்சுவார்த்தையில் என்னென்ன பேச வேண்டும் என்பது குறித்து அவர்கள் ஆலோசனை செய்ததாகவும் தெரிகிறது. மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுமா? விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments