Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா சர்ச்சை கிளப்பும் ட்வீட்கள் நீக்கம்? – ட்விட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

Advertiesment
கொரோனா சர்ச்சை கிளப்பும் ட்வீட்கள் நீக்கம்? – ட்விட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ்!
, ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (10:37 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் கொரோனா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடப்படும் ட்வீட்களை நீக்க ட்விட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் படுக்கை வசதி போதாமை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் கொரோனா குறித்த அரசின் செயல்பாடுகள் குறித்து பலர் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய மற்றும் தவறான தகவல்களை பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மக்களிடையே சர்ச்சைக்குரிய விமர்சனங்களால் எழும் பீதியை தவிர்க்க அவ்வாறான பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்க வேண்டுமென மத்திய அரசு ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக பிரமுகர் குண்டு வீசி கொலை; கொலையாளியை சுட்ட போலீஸ்! – செங்கல்பட்டில் பரபரப்பு!