Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக பிரமுகர் குண்டு வீசி கொலை; கொலையாளியை சுட்ட போலீஸ்! – செங்கல்பட்டில் பரபரப்பு!

Advertiesment
அதிமுக பிரமுகர் குண்டு வீசி கொலை; கொலையாளியை சுட்ட போலீஸ்! – செங்கல்பட்டில் பரபரப்பு!
, ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (10:28 IST)
செங்கல்பட்டில் அதிமுக பிரமுகரை மர்ம நபர்கள் குண்டு வீசி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மறைமலைநகரை சேர்ந்தவர் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரும், அதிமுக பிரமுகருமான திருமாறன். இவர் தனது திருமண நாளான நேற்று மறைமலைநகர் முருகன் கோவிலுக்கு வழிபாட்டிற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். இவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புக்கு இருக்க அனுமதி உண்டு.

இந்நிலையில் முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென திருமாறனை சுற்றி வளைத்த கும்பல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். அவருக்கு பாதுகாவலாக வந்த காவலர் மர்ம கும்பலை நோக்கி சுட்டதில் கொலையாளியில் ஒருவர் பலியானார். இந்த கொலை சம்பவத்தால் மறைமலைநகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமாறனை ஒரு கும்பல் கொல்ல முயன்ற நிலையில் தற்போது இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் தவிர அனைத்து மொழிகளிலும் புதிய கல்வி கொள்கை: ஸ்டாலின் கண்டனம்