தொடரும் கழிவுநீர் தொட்டி இறப்புகள்; நிரந்தர தடை விதிக்க அரசு திட்டம்!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (17:35 IST)
இந்தியாவில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பலர் விஷவாயு தாக்கி இறக்கும் நிலையில் முற்றிலுமாக அதை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதால் விஷவாயு தாக்கி இறக்கும் சம்பவம் பல நாட்களாக தொடர்ந்து வருகிறது. மனிதர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யக்கூடாது என்று சட்டம் இருந்தாலும் அது கடுமையாக பின்பற்றப்படாமல் உள்ளது.

முன்னதாக கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தப்படுத்தினால் சம்பந்தப்பட்ட தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு புதிய மசோதா ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி மனிதர்களை கழிவுகளை அள்ள செய்வதை தடுத்தல், முழுவதும் எந்திரங்களை பயன்படுத்துதல், மீறும் தனிநபர், நிறுவனத்திற்கான அபராதம் மற்றும் சிறை தண்டனையை அதிகப்படுத்துதல் ஆகிய புதிய சட்ட திட்டங்களை சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments