உக்ரைனிலிருந்து வேகமாக வெளியேறும் இந்தியர்கள் – கட்டுப்பாடுகளை தளர்த்திய மத்திய அரசு!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (12:16 IST)
போர் பதற்றம் காரணமாக உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேறி வரும் நிலையில் விமான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை திரட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில் பல்வேறு விமானங்களில் உக்ரைனிலிருந்து இந்தியர்கள் அவசரமாக நாடு திரும்பி வருகின்றனர். கொரோனா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துகள் இந்தியாவில் முழுவதுமாக அனுமதிக்கப்படவில்லை. அதனால் சிறப்பு விமானங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உக்ரைனிலிருந்து வெளியேறும் இந்தியர்கள் இந்தியா வருவதற்காக விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்துவதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments