Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் நிதி நெருக்கடியில் ரயில்வே: தனியார்மயமாக்கும் மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (14:25 IST)
ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பாஜக ஆட்சியின்போதே ரயில்வே சேவையில் தனியாரை ஈடுபடுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. ஆனால் ரயில்வே ஊழியர்கள் மற்றும் எதிர்கட்சிகளின் போராட்டங்களால் அத்திட்டம் கை விடப்பட்டது.

தற்போது நிர்வாக ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது ரயில்வே துறை. ரயில்வே பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தை ரயில்வே மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இதற்காக ஐ.ஆர்.சி.டி.சி-யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளது மத்திய அரசு.

இந்த பங்கு விற்பனை மூலம் 600 கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த பங்கு வெளியீட்டு பணிகளை ஐ.டி.ஐ.பி கேபிடல் மார்கெட் & செக்யூரிட்டிஸ், எஸ்பிஐ கேபிடல் மார்கெட்ஸ், எஸ் மார்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடு..! சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பு.!

அப்பா... உங்களது கனவுகள், எனது கனவுகள்.. ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ராகுல் காந்தி உருக்கம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா.? பதிலளிக்க கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தேங்கிய மழை நீர்! வெளியேற கட்டமைப்பு இல்லையா?

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

அடுத்த கட்டுரையில்
Show comments