Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் எல்.ஐ.சி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு.. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்குமா?

Advertiesment
LIC insurance

Siva

, வெள்ளி, 11 ஜூலை 2025 (07:51 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு எல்ஐசி பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்தபோது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது மீண்டும் எல்ஐசி பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், பொதுப் பங்கு வெளியீடு (IPO) என்ற முறையில் எல்ஐசி பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்யப்பட்ட இந்த பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி கிடைத்தது. தற்போது எல்ஐசியின் பங்குகள் ரூ.926 ஆக இருப்பதால், இந்த பங்குகளை வாங்கியவர்களுக்கு லாபம் தான் கிடைத்துள்ளது.
 
இந்த நிலையில், மீண்டும் எல்ஐசியின் 6% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் கூடுதலான நிதியை திரக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதைப்போல், 2027 ஆம் ஆண்டும் 10% எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
எல்ஐசி பங்குகளை மீண்டும் விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை - செங்கல்பட்டு வழித்தடம்.. இன்று 19 மின்சார ரயில்கள் ரத்து..!