Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெயில் எடுக்க காசு இல்லாத கைதிகளுக்கு உதவி! – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Advertiesment
prison
, புதன், 1 பிப்ரவரி 2023 (13:10 IST)
இன்று மத்திய பட்ஜெட் 2023-24 அறிவிப்பில் சிறை கைதிகளுக்கு உதவும் வகையிலான சில அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.

இன்று பாஜக அரசின் கடைசி ஆண்டு மத்திய பட்ஜெட் 2023-24 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பாலோனாரால் எதிர்பார்க்கப்பட்டது போலவே வருமானவரி வரம்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறை வாசிகளுக்கும் சில  சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சிறை தண்டனை பெற்று சிறையில் உள்ள அபராதம் மற்றும் பெயில் தொகை கட்ட இயலாத ஏழை சிறைக் கைதிகளுக்கு தேவையான பொருளாதார உதவி அரசால் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


மேலும் 39 ஆயிரத்திற்கும் அதிகமான தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், 3,400 விதிகள் புரிதல் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாது 42 மத்திய சட்டங்கள் ஜன் விஸ்வாஸ் மசோதா மூலமாக சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர இ-நீதிமன்றங்களை உருவாக்கும் திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்சார வாகனங்களுக்கு வரி குறைப்பு.. பெட்ரோல், டீசல் என்ன ஆச்சு?