நேற்று மத்திய அரசு அறிவித்த ஆண்டு பட்ஜெட்டில் பிற நாட்டுடனான வளர்ச்சி பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளும் வெளியாகிய நிலையில், மக்களுக்கு தேவையான முறையான அறிவிப்புகள் இல்லை என எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நேற்றைய பட்ஜெட் தாக்கலில் இந்தியா பிற நாடுகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ள உள்ள வளர்ச்சி பணிகளுக்காக ரூ.200 கோடியும், மியான்மரில் மேற்கொள்ள உள்ள வளர்ச்சி பணிகளுக்காக ரூ.600 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.