விளம்பரம் செய்யும் நோக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் அழைப்பு, குறுஞ்செய்தி அனுப்புதல் குறித்து புதிய நடவடிக்கைகளை தொலைத்தொடர்பு துறை மேற்கொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் அதிகரித்துள்ள நிலையில் மக்களிடையே செல்போன் புழக்கம் அதிகரித்துள்ளது. அதேசமயம் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்களை சேகரித்து பல நிறுவனங்கள் விளம்பரம் மற்றும் விற்பனை நோக்கில் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி விடுப்பது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் விளம்பரம் செய்யும் நோக்கில் செல்போன் வைத்திருப்பவர்களுக்கு அழைப்பு, குறுஞ்செய்தி மூலம் தொல்லை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்க மத்திய தொலைத்தொடர்பு துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.