Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாய் விளங்கும் துளசி!!

Advertiesment
ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாய் விளங்கும் துளசி!!
, செவ்வாய், 6 ஜூலை 2021 (00:00 IST)
துளசி செடி ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாக துளசி விளங்குவதுடன், பாம்பை மெத்தையாக கொண்டு துயிலும் பெருமாளின் மார்பில் மாலையாக என்றென்றும் தவழ்ந்து வலம் வருகிறாள். துளசி, சங்கு, சாளக் கிராமம் மூன்றும் ஒன்றாக வைத்து பூஜிப்பவர்களுக்கு முக்காலமும்  உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும்.
 
எம் பெருமானுக்கு இரண்டு பொருட்களில் தீராத காதல் உண்டு. ஒன்று கள்ளம் கபடு இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பக்தர்கள் மீது.  ஒரு பூவை எடுத்து சமர்ப்பித்தாலும் நம்மை தேடி ஓடி வருபவர் எம் பெருமான். லக்ஷ்மியை சொல்லவே வேண்டாம். கருணையின்  பிறப்பிடமே நம் தாய். மற்றொன்று நம் வீட்டு முற்றத்தில் வளர்ந்து தெய்வீக மனம் பரப்பும் துளசி மீது.
 
முதலில் எந்த கடவுளை வணங்குவதாக இருந்தாலும், பூஜை தடங்கல் இன்றி நடக்க, முழு முதல் கடவுளான விநாயகப் பெருமானை வணங்க வேண்டும். வெற்றிலை மீது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து "ஓம் விக்னேஸ்வரா நமஹ" என்று 3முறை சொல்லி, மலர் போட்டு  வணங்கவும். அருகம் புல் போட்டு விநாயகரை வணங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
 
துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகல் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசி செடி வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தானம் குங்குமம் பொட்டு வைத்து வணங்குதல்  சிறப்பாகும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணத்தடை நீங்கி செல்வம் அதிகரிக்கசில நம்பிக்கைகள்....!