Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாயை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த மகன்: அதிர்ச்சி வீடியோ!!

Advertiesment
தாயை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த மகன்: அதிர்ச்சி வீடியோ!!
, வெள்ளி, 5 ஜனவரி 2018 (15:52 IST)
பெற்ற தாயை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்து, பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மகன் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் சிக்கியுள்ளார். 
 
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஜெர்ஸ்ரீபென் நன்வனி. இவர் தனது மகன் சந்தீப்புடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நன்வனி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டது. 
 
இது சம்மந்தமான வழக்கை போலீசார் விசாரித்து வந்தனர். தற்போது நன்வனியை கொலை செய்தது அவரது மகன் என தெரியவந்துள்ளது. அதுவும், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமெரா மூலம் சந்தீப் சிக்கியுள்ளார்.
 
நன்வனி நோய் காரணமாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். நன்வனியை கவனித்து கொள்வதில் சந்தீப்புக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாயை கொலை செய்ய முடிவெடுத்து சந்தீப் அவரை மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளார். 
 
இவருக்கு இவரது மனைவியும் துணையாய் இருந்துள்ளார் என தெரிகிறது. அதன் பின்னர் தனது தாய் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். இது குறித்த உண்மை தற்போது சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் வெளியாகியுள்ளது. போலீஸார்  சந்தீப்பை கைது செய்துள்ளனர். 

நன்றி: ABP

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிவிட்டரில் டிரெண்டான ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ - வைரல் மீம்ஸ்