Publish Date: Fri, 11 Mar 2022 (15:59 IST)
Updated Date: Fri, 11 Mar 2022 (16:01 IST)
சி.பி.எஸ்.இ. இரண்டாம் பருவத் தேர்வு தேதிகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26 முதல் மே 19 வரை நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
முதல் பருவத்தேர்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் பருவத்தேர்வுக்கான பாடவாரியான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது
சி.பி.எஸ்.இ. இன்அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு சென்று மாணவர்கள் பாட வாரியான தேர்வு தேதியை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.