சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பருவ பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளதை அடுத்து பள்ளிகளுக்கு சிபிஎஸ்சி முக்கிய அறிவுறுத்தல்கள் ஒன்றை வெளியிட்டுள்ளது
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பருவத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு டிசம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் சிபிஎஸ்சி பருவ தேர்வு நடத்தும் பள்ளிகள் எந்தவிதமான புகாருக்கும் இடம் தராமல் தேர்வை நல்ல முறையில் நடத்த சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்சி பருவத்தேர்வு ஒத்திவைக்கப்படும் என்ற வதந்தியை முறியடித்து இன்று இந்தியா முழுவதும் முதல் பருவ பொதுத் தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.