Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் விடுதலையே ஒழுக்கமின்மைக்கு காரணமா? – சிபிஎஸ்சி கேள்வியால் சர்ச்சை!

Advertiesment
பெண் விடுதலையே ஒழுக்கமின்மைக்கு காரணமா? – சிபிஎஸ்சி கேள்வியால் சர்ச்சை!
, திங்கள், 13 டிசம்பர் 2021 (12:08 IST)
சிபிஎஸ்சி தேர்வில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பெண் விடுதலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சிபிஎஸ்சி கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 11ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் பெண் விடுதலை குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கேள்வி ஒரு சொற்றொடராக உள்ளது. அதில் பெண் விடுதலையால் மனைவிகள் தங்கள் கணவருக்கு கீழ்படிவதை நிறுத்தி விட்டார்கள்.அதுவே ஒழுக்கமின்மைக்கு காரணம் என்ற இன்னும் சில வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இறுதியில் அதற்கு விடையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்சன்களில் ஒன்றில் “எழுத்தாளர் ஒரு ஆண் பேரினவாத நபர்”, “எழுத்தாளர் இயல்பை எழுதியுள்ளார்” என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த கேள்வி குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி “என்னால் நம்பவே முடியவில்லை! நாம் உண்மையில் குழந்தைகளுக்கு இவற்றை தான்  கற்றுக்கொடுக்கிறோமா? பெண்கள் மீதான இந்த பிற்போக்குத்தனமான கருத்துக்களை பாஜக அரசு ஆதரிக்கிறது என்பது தெளிவாகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி 6ம் தேதி சென்னை புத்தக கண்காட்சி! – முதல்வர் தொடங்கி வைக்கிறார்!