Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ தேர்வு தேதியை அறிவித்த மத்திய கல்வி அமைச்சர்

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (18:32 IST)
சிபிஎஸ்சி தேர்வுகள் தேதி டிசம்பர் மாதம் 31 ஆம் அறிவிப்பு செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
இதன்படி மே 4 முதல் ஜுன் 10 வரை சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு செய்துள்ளார். இதனையடுத்து சி.பி.எஸ்.இ தேர்வுகள் இந்த ஆண்டு நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு சிபிஎஸ்சி தேர்வுகள் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தேர்வுகள் நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளதை அடுத்து சி.பி.எஸ்.இ  மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments