Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்பது நான் ஒருவன் மட்டுமே: முக ஸ்டாலின்

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (18:17 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மர்மமாக இருப்பதாக பலர் குற்றம் சாட்டிய நிலையில் அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க ஆறுமுகசாமி என்பவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது 
 
தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட இந்த ஆணையம் சில மாதங்கள் விசாரித்து வந்த நிலையில் திடீரென இந்த ஆணையத்தின் பணிகள் நீதிமன்ற உத்தரவு காரணமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்த வழக்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி வேண்டும் என்று பலர் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா மரணத்தில் நீதி கேட்டு தற்போது வரை பேசிக் கொண்டிருப்பது நான் மட்டுமே என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தகுந்த முறையில் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிமுகவை ஆலமரம் போல் வளர்த்த ஜெயலலிதாவின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க அதிமுக அரசே முன்வராத போது திமுக தலைவர் இதுகுறித்து பேசிவருவது அனைவரும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments