Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை: காதலி ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பா?

Advertiesment
சுஷாந்த் சிங்

Siva

, வெள்ளி, 24 அக்டோபர் 2025 (15:46 IST)
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்திதான் அவரது மரணத்திற்கு காரணம் என சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
 
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது அதன் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது.  நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடந்த தீவிர விசாரணையின் முடிவில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என சிபிஐ அறிவித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கை முடித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
 
இருப்பினும், சிபிஐயின் இந்த அறிக்கைக்கு சுஷாந்தின் தந்தை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சிபிஐயின் இந்த அறிவிப்பு, நான்கு ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் ஒரு முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்ஸ்டாகிராம் காதல்: திடீரென குளத்தில் குதித்த காதலர்கள்.. காதலன் பலி.. ஐசியூவில் காதலி..!