கேரள பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாடுகளை எதிர்த்து மாணவி தீபா காலவரையற்ற உண்ணாவிரதம் போரட்டம் நடத்தி வருகிறார்.
கேரள மாநிலம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் சாதிய பாகுபாடுகள் தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு பிஎச்டி பயிலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி தீபா மோகனுக்கு ஆராய்ச்சி உதவித்தொகை நிறுத்தப்பட்டது.
கேரள உயர்நீதிமன்றம் தீபாவின் ஆராய்ச்சியை விரைப்படுத்த உத்தரவிட்ட நிலையில் அப்பல்கலைக்கழக அதிகாரிகள் யாரும் பதிலளிக்கவில்லை இதை எதிர்த்து, கடந்த 8 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுட்டுள்ளார்.