பீகார் மாநிலத்தில் சமீபத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் முசாப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த கூலி தொழிலாதி ஒருவருக்கு 2 மகள்கள். அவர் வெளிமாநிலத்தில் வேலை வந்தார்.
ஜனவரி 3 ஆம் தேதி இவரது வீட்டிலில்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த 4 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தடயங்களை அழிக்க அவரை தீ வைத்து எரித்தனர்.
இதுகுறித்து போலிஸில் புகாரளிக்கப்பட்டது.
இதனையடுத்து போலிஸார் தீவிரா விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஆண்டு சிறுமியை வீடியோ எடுத்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமைகு உட்படுத்தியாகத் தெரிகிறது. இந்நிலையில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.