Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வது பற்றி காங்கிரஸ் பேசலாமா ? அமித் ஷா விமர்சனம்

சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வது பற்றி காங்கிரஸ் பேசலாமா ? அமித் ஷா விமர்சனம்
, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (14:37 IST)
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எமர்ஜென்சியை அமல்படுத்திவிட்டு, சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வது பற்றி பேசலாமா என்று இன்று ராஜ்யசபாவில் பாஜக கட்சி தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
இன்று நாடாளுமன்றத்தில் உள்ள ராஜ்யசபாவில், உபா சட்ட திருந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அப்பொது பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப, சிதம்பரம் உபா சட்ட திருத்தங்களை முன்வைத்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
 
இதற்கு உள்துறை அமைச்சர் பதிலளித்து கூறியது : உபா சட்ட திருத்தத்தின்படி எந்த தனி நபரின் உரிமையும் பாதிக்காது. அதற்கான முக்கிய அம்சங்கள் இந்த மசோதாவில் உள்ளது.  காங்கிரஸ் ஆட்சியில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது, நாட்டில் 19 மாதங்களாக நாட்டில் ஜனநயகம் இல்லை. அனைத்து ஊடகங்களும் தடைசெய்யப்பட்டது. எதிர்கட்சியை சேர்ந்த தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
ஆனால் தற்போது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசுகின்றனர்.பயங்கரவாதத்திற்கு மதம் என்பதி கிடையாது. பயங்கரவதம் மனித குலத்திற்கு எதிரானது. அதனால் எதிர்க்கட்சியாக நாங்கள் இருந்தபோது, உபா சட்ட திருத்தங்களை ஆதரித்தோம். 
 
இந்நிலையில் இந்த உபா சட்ட திருத்த மசோதாவுக்கு முழுமையாக நாம் ஆதரவு அளித்தால்,நம் நாட்டு விசாரணை அமைப்புகள் உலக அளவில் முழு அதிகாரத்தன்மையுடன் செயல்பட வழிவகுக்கும். ஒருதீவிரவாத இயக்கமே தடைசெய்யப்படும் என்ற போதில் ஒரு தனிமனிதரை ஏன் தீவிரவாதியாக அறிவிக்க வேண்டுமென ப. சிதம்பரம் கேள்வி எழுப்புகிறார். தனிமனிதரையும் பயங்கரவாதி என அறிவிக்காவிட்டால் அவர்களது செயல்பாட்டை கட்டுப்படுத்த முடியாது போய்விடும் என்று தெரிவித்தார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காபியா ? பியரா ? டீயா ? - இணையத்தில் உலாவரும் பதிவு !