Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் உருவ பொம்மைகளை எரியுங்கள்... பொதுச்சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் - மோடி

என் உருவ பொம்மைகளை எரியுங்கள்... பொதுச்சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் - மோடி
, ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (15:08 IST)
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பல்கலை கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டம் நாடு முழுவது வலுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதாக பலரும் விமர்சங்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திய மோடி கூறியுள்ளதாவது : அனைவரின் வளர்ச்சிக்காக தான் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. எதிர்கட்சிகள் ஏன் தவறாக தூண்டு விடுகிறார்கள் என கேள்வி எழுப்பினார். இந்த சட்டம் குறித்து தவறாக பிரசாரம் செய்வதாகவும் என்று தெரிவித்தார்.
 
மேலும்,காலம் பார்க்காமல்  உழைக்கும் காவலர்களுக்கு மதிப்பு கொடுங்கள்.  என் உருவ பொம்கைளை எரியுங்கள். ஆனால் பொதுச் சொத்துகளை சேதப்படுத்த வேண்டாம். நாங்கள் மக்களுக்காக உழைக்கிறோமே தவிர மதத்திற்காக அல்ல என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைட் அடிக்கவே மாணவர்கள் போராட்டம்: பிரபல நடிகரின் சர்ச்சை கருத்து!