Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடியின் கனவு திட்டத்திற்கு தடை போட்ட உத்தவ் தாக்கரே

பிரதமர் மோடியின் கனவு திட்டத்திற்கு தடை போட்ட உத்தவ் தாக்கரே
, திங்கள், 2 டிசம்பர் 2019 (23:13 IST)
பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டம் தற்காலிமாக நிறுத்தி வைக்க மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
மும்பை- அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரதமரின் கனவு திட்டமான இந்த புல்லட் ரயில் திட்டத்தை, ஜப்பான் மற்றும் பன்னாட்டு நிதி முகமை உதவியுடன் 1.1 லட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. 
 
webdunia
ஆனால் சமீபத்தில் மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ஏற்ற உத்தரவ் தாக்கரே இந்த திட்டத்திற்கு திடீரென தடை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘மும்பை- அகமதாபாத் இடையே சிறப்பு ரயில் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தின் மதிப்பீடு, அதில் உள்ள நெருக்கடிகள், காலக்கெடு ஆகிய அனைத்து அம்சங்களையும் ஆராய உள்ளதாகவும் அதுமட்டுமின்றி சில மாற்றங்களுடன் விரைவில் இந்த திட்டம் புத்துணர்ச்சியுடன் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் புல்லட் ரயில் திட்டத்தை விட தன்னுடைய அரசு வேளாண் மேம்பாடு, விவசாயிகளுக்கு இழப்பீடு, மக்களுக்கான சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவிருப்பதாகவும் முன்னாள் மகாராஷ்டிர முதல்வர்கள் செய்த தவறுகளை தான் செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்
 
புல்லட் ரயில் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக, விவசாய மற்றும் தன்னார்வ அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு அவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரசாந்த் கிஷோருடன் டீலிங் முடிந்தது, பலகோடி கைமாற்றம்: எந்த கட்சிக்கு தெரியுமா?