Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் நிறைவு; நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைப்பு

Siva
வியாழன், 1 பிப்ரவரி 2024 (12:20 IST)
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்பார்த்தது போலவே இதில் எந்த விதமான பரபரப்பான அறிவிப்பு வெளியாகவில்லை என்பதை பார்த்தோம். 
 
குறிப்பாக வருமானவரி முறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும்  ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்சார திட்டம் வழங்கப்படும் என்றும் பத்து ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். 
 
மேலும் இது இரண்டு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அறிவிப்பு எதுவும் இருக்காது என்று எதிர்பார்த்த மாதிரியே தான் பட்ஜெட் உரை தற்போது முடிவடைந்து உள்ளது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் பட்ஜெட்  தாக்கல் செய்யும் பணி நிறைவு பெற்றதாகவும் இதனை அடுத்து நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை காலை நாடாளுமன்றம் கூடியதும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments