Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

108 ரூபாய்க்கு 28 நாட்கள் பிளான்.. பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் புதிய திட்டம்..!

bsnl

Siva

, வெள்ளி, 14 ஜூன் 2024 (20:01 IST)
ஏர்டெல், ஜியோ போன்ற அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களிலும் 28 நாட்களுக்கு குறைந்தபட்சம் 150 ரூபாய் என்ற ரீசார்ஜ் திட்டம் இருக்கும் நிலையில் பிஎஸ்என்எல் 28 நாட்களுக்கு 108 ரூபாய் திட்டத்தை அறிவித்துள்ளதை அடுத்து இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள 108 ரூபாய் திட்டமானது 28 நாட்கள் சேவை செல்லுபடி ஆகும் என்றும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 1  ஜிபி டேட்டா கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் பலன்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் உள்ளூர் எஸ்எம்எஸ்களுக்கு 80 பைசா வசூலிக்கப்படும் என்றும் தேசிய எஸ்எம்எஸ் களுக்கு ஒரு ரூபாய் 20 காசு வசூலிக்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது .
 
தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களைப் போல் லாபத்தை கருத்தில் கொள்ளாமல் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருச்சி எஸ்.ஆர்.எம் ஓட்டல் விவகாரம்: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அரசு விளக்கம்..!