கர்நாடக மாநிலத்தில் லிங்காய என்ற சமயத்தை தோற்றுவித்தவர் பசவண்ணா ஆவார். தற்போது இவரது கொள்கைகளை பின்பற்றும் பெரும்பாலான மக்கள் உள்ளனர். இவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் பாசவண்ணர் கூறிய கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர்.
இதில் திருமணத்தின் போது வேத மந்திரங்களை ஒத மாட்டார்கள். கன்னியாதானம்,அட்சதை தூவுதலும் செய்ய மாட்டார்கள். மேலும் இவர்கள் வழக்கப்படி மணகனின் கழுத்தில் மணப்பெண் தாலி கட்டுவார்.
இந்நிலையில் விஜயாபுரா மாவட்டம் நாலத்த வாடா பட்டணம்கிராமத்தில் பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி அமித்- பிரியா, பிரபுரா - அங்கிதா ஆகிய இரு ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனனர்.இத்திருமணத்தில் மணப்பெண் இருவரும் மணமகன்கள் கழுத்தில் தாலிகட்டினர்.