தாலி கட்டிய சில நிமிடங்களில் அடிதடியில் இறங்கிய மணமகன் - மணமகள்!
தாலி கட்டிய சில நிமிடங்களில் மணமகன் மற்றும் மணமகள் ஒருவரை ஒருவர் அடிதடியில் இறங்கிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் கடந்த 12ஆம் தேதி திருமணம் ஒன்று நடந்த நிலையில் அந்த திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகன் வலுக்கட்டாயமாக இனிப்பு ஊட்டியதாக தெரிகிறது
இதனால் எரிச்சலடைந்த மணமகள் மணமகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் மணமகள் கன்னத்தில் அறைய மணமகள் செருப்பு கழட்டி மணமகனை அடிக்க இருவரும் அடிதடியில் இறங்கினர்
இதனை உறவினர்கள் தடுத்தும் முடியாமல் அடிதடி தொடர்ந்து கொண்டிருந்தது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது