Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்யாணத்துக்கு அடுத்த நாள் மணப்பெண் உயிரிழப்பு ... கதறி அழுத புதுமாப்பிள்ளை ! உறவினர்கள் சோகம்!

Advertiesment
கல்யாணத்துக்கு அடுத்த நாள் மணப்பெண் உயிரிழப்பு ... கதறி அழுத புதுமாப்பிள்ளை ! உறவினர்கள் சோகம்!
, திங்கள், 2 டிசம்பர் 2019 (18:43 IST)
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு  இளம்பெண், திருமணம் முடிந்த அடுத்த நாளே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்,   மணமகன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாலசா மண்டலம் அருகில் கருடாகாண்டி என்ற கிராமத்தில், தமயந்தி என்ற இளம் பெண்ணுக்கும்,கோபிநாத் சுரேஷ் என்பவருக்கும் கடந்த வியாழக்கிழமை அன்று, லட்சிமிநரசிம்ம சுவாமி கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.
 
இதனையடுத்து அடுத்தநாள், பெண் வீட்டில் திருமணச் சடங்குகள் அனைத்தும் முடிக்கப்பட்ட பின், மாமனார் வீட்டுக்குச் செல்ல புதுபெண் தமயந்தி ஆயந்தமானார். அந்த நேரத்தில் அவர் தரையில் சுருண்டு விழுந்தார்.
 
அதைப் பார்த்த உறவினர்கள் பதறித் துடித்தனர். பின்னர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு தமயந்தியைக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும்  வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
 
இதைச் சற்றும் எதிர்பார்க்காத மணமகன் கோபி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். பின் அவர் தமயந்தியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்தார். 
 
திருமணம் முடிந்த ஒரேநாளில் மணப்பெண் இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிவி சேனலை வறுத்தெடுக்கும் சீமான் தம்பிகள்! – ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி!