18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே.
இதனை அடுத்து மத்திய அரசு மாநிலங்களுக்கு பல்வேறுஅறிவுறுத்தல்களை வெளியிட்டு வருகிறது
குறிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது
இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
75வது சுதந்திர தினத்தை ஒட்டி இந்த இலவச பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.