Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதியில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்.. திருமலைக்கு வரும் பக்தர்கள் அச்சம்..!

Advertiesment
திருப்பதியில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்.. திருமலைக்கு வரும் பக்தர்கள் அச்சம்..!

Siva

, புதன், 30 அக்டோபர் 2024 (14:24 IST)
திருப்பதியில் தொடர்ந்து கோவில் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பதை அடுத்து, திருமலைக்கு வரும் பக்தர்கள் அச்சம் கொண்டு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தமிழகம் உள்பட இந்தியாவின் முக்கிய பகுதிகளில் போலியான வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது என்பதும் அது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதியில் உள்ள வரதராஜ சாமி கோயில், இஸ்கான் கோயில் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், திருமலைக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் அச்சம் அடைவதாகவும், இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இது குறித்து கூறுகையில், வெடிகுண்டு மிரட்டல் குறித்து பக்தர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும், திருப்பதி மற்றும் திருமலை முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறப்பு பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், கமாண்டோ பாதுகாப்பு படையினர் இரவு முழுவதும் திருப்பதி மலையில் வாகனங்களில் ரோந்து பணிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

திருமலையில் சந்தேகப்படும் வகையில் நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க 28 இடங்களில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதாகவும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத பேருந்துகள்.. போக்குவரத்து நெருக்கடி..