Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்வுக்கு பயந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12ஆம் வகுப்பு மாணவர்.. டெல்லியில் பரபரப்பு..!

Advertiesment
bomb threat

Mahendran

, வெள்ளி, 10 ஜனவரி 2025 (11:49 IST)
டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர் தேர்வுக்கு பயந்து அந்த பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மிரட்டல் விடுப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வெடிக்கும் என்ற அழைப்புகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று காலை தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12 வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
பள்ளிகளில் நடக்கும் தேர்வை தடுக்கவே ஈமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக முதல் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதுவரை ஆறு முறை வெடிகுண்டு மிரட்டல் எடுத்துள்ளதாகவும், அனைத்துமே ஈமெயில் மூலம் அனுப்பி இருப்பதாகவும் குறைந்தபட்சம் ஒரே தடவையில் 23 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற போலி மிரட்டல்களால் பெரும் பதற்றம் ஏற்பட்டு, காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நேரம் விரயம் ஆகுகிறது என்றும், போலியாக வெடிகுண்டு மிரட்டல் எடுக்கும் நபர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்கிறீர்களா? ஒரு முக்கிய அறிவுறுத்தல்..!