Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக வெளியேறிய பிரமுகர்கள்..!

Mahendran
சனி, 1 மார்ச் 2025 (13:20 IST)
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால்அங்கு தங்கியிருந்த பிரமுகர்கள் அவசர அவசரமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
டெல்லியில் "வைகை’ ’பொதிகை" என்ற பெயரில் தமிழ்நாடு இல்லம் செயல்பட்டு வருகிறது. அங்கு தமிழகத்திலிருந்து செல்லும் பிரமுகர்கள் தங்குவார்கள்.
 
இந்த நிலையில், இன்று திடீரென தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து, தமிழ்நாடு இல்லத்திலிருந்து பிரமுகர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
 
மோப்பநாய் உதவியுடன், போலீசார் தமிழ்நாடு இல்லம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் எந்தவிதமான ஆபத்தான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை அடுத்து, இது வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.
 
இதனை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? அந்த ஈமெயிலை அனுப்பியது யார்? என்பதற்கான தகவலைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களுக்கு பின் மீண்டும் சிலிண்டர் விலை உயர்வு.. சென்னையில் என்ன விலை?

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து.. ஒரே ஒரு வரிதான்..!

தங்கம் விலை இன்றும் குறைவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

தெலுங்கானா சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு.. குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் உடல்கள்..!

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்.. தமிழில் வாழ்த்து கடிதம் எழுதிய ஆளுனர் ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments