குஜராத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் 14 மாணவர்கள் உள்பட 16 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
குஜராத் மாநிலம் வதேதரா என்ற நகரை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் சுற்றுலா வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்று கொண்டிருந்தனர். 27 மாணவர்கள் ஒரு படகில் பயணம் செய்த நிலையில் திடீரென படகு கவிழ்ந்து உபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 14 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உடனடியாக மாவட்ட கலெக்டர் உள்பட உயர் அதிகாரிகள் வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர். இதுவரை வந்த தகவலின் படி 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி தலா 2 லட்சம் நிவாரணம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 நிவாரண உதவியை அறிவித்துள்ளார். அதேபோல் குஜராத் மாநில அரசு உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.