பல லட்சம் ஃபாலோவர்களை கொண்ட இன்ஸ்டா மாடல் பெண் ரூ.40 கோடி வரை பண மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சந்தீபா விர்க் என்ற பெண். இவர் இன்ஸ்டாகிராமில் பல கவர்ச்சிகரமான வீடியோ, மாடலிங் போட்டோக்களை வெளியிட்டு வந்த நிலையில் இவரை பின்பற்றுபவர்கள் 12 லட்சமாக உயர்ந்தார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் ஹைபூகேர் என்னும் அழகுசாதன பொருள் நிறுவனத்தின் அழகு பொருட்களை தொடர்ந்து தனது வீடியோக்களில் அவர் ப்ரொமோட் செய்து வந்துள்ளார். அதை நம்பி அவரது ஃபாலோவர்கள் பலரும் அந்த பொருட்களை ஆர்டர் செய்த நிலையில், பலருக்கு சர்வர் சரியாக வொர்க் ஆகவில்லை, பலரது பணம் டெபிட் ஆன பிறகும் ஆர்டர் உறுதியாகவில்லை என பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் பல புகார்களை சந்தீபாவுக்கு தனிச்செய்தியில் அனுப்பியும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் சிலரிடம் சந்தீபா பண மோசடியிலும் ஈடுபட்டதாக மும்பை, டெல்லியில் உள்ள காவல் நிலையங்களில் சிலர் புகார் அளித்துள்ளனர். அதை தொடர்ந்து முறையற்ற வங்கி பணப்பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டும் எழுந்த நிலையில் அமலாக்கத்துறையே நேராக சந்தீபாவின் வீட்டில் சோதனை செய்த நிலையில் அவர் மோசடிகள் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
FDA அங்கீகாரம் பெறாத அழகு சாதன பொருட்களை அதிக விலைக்கு ஃபாலோவர்ஸ் தலையில் கட்டியது, தயாரிப்பு பொருட்களின் உண்மை தன்மையில்லாத குற்றச்சாட்டு உள்ளிட்ட பல புகார்கள் அவர் மீது எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இதில் சந்தீபாவுடன் முன்னாள் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவன டைரக்டர் நடராஜன் சேதுராமனுக்கு தொடர்புகள் உள்ளதாகவும், அவர் 40 கோடி ரூபாயை தனிநபர் ஆதாயத்திற்காக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K