Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிவிட்டதே: சுவிஸ் வங்கியில் உயர்ந்தது கருப்பு பண பதுக்கல்!

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (14:35 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய கட்சியான பாஜக ஆட்சி அமைத்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என கூறப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. 
 
இந்நிலையில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் 3 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பதுக்கல் குறைந்தது. இந்தியர்கள் பலரும் சுவிஸ் வங்கியில்தான் கருப்பு பணத்தை பதுக்குகின்றனர். 
 
ஆனால், கடந்த மூன்று ஆண்டைவிட இந்த ஆண்டு கருப்பு பண பதுக்கல் 50% உயர்ந்துள்ளது. அதாவது சுமார் ரூ.7 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளதாம். மேலும், இது குறித்து சில புள்ளி விவரங்கலும் வெளியாகியுள்ளது. 
 
# ரூ.3,200 கோடி இந்திஒய ரூபாயாக வாடிக்கையாலர்களின் டெபாசிட்டுகளாக செலுத்தப்பட்டுள்ளது. 
 
# பிற வங்கிகள் மூலமாக சுவிஸ் வங்கிகளில் போடப்பட்ட தொகை ரூ.1,050 கோடி.
 
# பங்குகள் உள்ளிட்ட பிற வகைகளில் செலுத்தப்பட்ட தொகை ரூ.2,640 கோடி.
 
டிமானிடைசேசன் நடவடிக்கைகள் மூலம் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று கூறி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு புது 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. 
 
இந்த மாற்றத்தால், கருப்பு பண பதுக்கல் ஒழியும் என கூறப்பட்ட நிலையில், சுவிஸ் வங்கியில் பண பதுக்கல் சதவீதம் அதிகரித்துள்ளது அரசிற்கு கடும் அதிருப்தியில் உள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.. முதல்வர் ஸ்டாலின்

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments