Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக இருக்கும்: அமித்ஷா பேட்டி..!

Mahendran
சனி, 12 ஜூலை 2025 (11:45 IST)
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அந்த ஆட்சியில் பாஜக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், அப்படி வெற்றி பெற்றால் பாஜக ஆட்சியில் பங்கு பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
'தமிழக வெற்றிக் கழகம்' உங்கள் கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, "இப்போதைக்கு அதைச் சொல்ல முடியாது. ஆனால், அதே நேரத்தில் திமுகவுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஓர் அணியில் கொண்டுவர முயற்சி செய்வோம்" என்று தெரிவித்தார்.
 
தமிழகத்தில் உள்ள மொழிப் பிரச்சினை குறித்த கேள்விக்கு, "நான் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சொல்ல வேண்டியது ஒன்றுதான், தமிழில் மருத்துவக் கல்வியைக் கற்றுக்கொடுங்கள், அதை ஏன் செய்யக்கூடாது? பொறியியல் படிப்பைத் தமிழில் கற்றுக்கொடுங்கள், அதை ஏன் நீங்கள் செய்யவில்லை? தமிழில் கற்பதை எதிர்ப்பதுதான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றால் எனக்கு அதில் பிரச்சனை இருக்கிறது" என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments