Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயல்கிறது - திக் விஜய் சிங் குற்றச்சாட்டு

Advertiesment
பாஜக குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயல்கிறது - திக் விஜய் சிங் குற்றச்சாட்டு
, செவ்வாய், 10 மார்ச் 2020 (15:12 IST)
பாஜக குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயல்கிறது - திக் விஜய் சிங் குற்றச்சாட்டு
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் அந்த ஆட்சியை கலைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால் அம்முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில், பாஜக குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயல்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
 
காங்கிரஸ் தனது உட்கட்சி விவகாரம் காரணமாக தற்போது ஆட்சியை இழக்கும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 பேர் திடீரென மாயமாகி உள்ளனர் என்றும், அவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பெங்களூரில் தங்கி இருக்கலாம் என்றும் சிந்தியாவை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது
 
நள்ளிரவில் அமித்ஷா நடத்திய மீட்டிங்:நள்ளிரவில் அமித்ஷா நடத்திய மீட்டிங்:இந்த நிலையில் மத்திய பிரதேச விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நள்ளிரவில் திடீரென ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளார். இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.
 
மத்திய பிரதேசத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆக இருக்கும் சிந்தியா உள்பட 17 எம்எல்ஏக்களை பாஜக வளைக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் சிந்தியாவுக்கு முதல்வர் பதவி அல்லது ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சிந்தியாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி அவரை தங்கள் பக்கம் பாஜக இழுத்துவிட்டால் மத்திய பிரதேசத்தில் ஆட்சி மாறும் என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிரமாக முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதால் அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்து திக் விஜய் சிங் கூறியுள்ளதாவது :
 
மத்திய பிரதேச மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சியை கலைக்க பாஜக சதி செய்கிறது. சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு கொண்டு செல்ல பாஜக 3 விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இதை பாஜக ஏன் செய்துள்ளது என்பதற்கான காரணம் எங்களிடம் உள்ளது. மேலும், முதல்வர் கமல்நாத், மாஃபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்? கைப்பற்ற காத்திருக்கும் பாஜக!