Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம்: தேர்தல் பத்திரங்கள் குறித்து பாஜக..!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம்: தேர்தல் பத்திரங்கள் குறித்து பாஜக..!

Mahendran

, வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (11:34 IST)
தேர்தல் பத்திரங்கள் விவகாரம் குறித்து நேற்றைய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கிய நிலையில் இந்த தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பா.ஜ.க தலைவரும் முன்னாள் சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
 
 தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பை பா.ஜ.க மதிக்கிறது. ஆனால் அதே நேரத்தில், இந்தத் திட்டம் தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் நோக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். 
 
இண்ட்க தீர்ப்பு நூற்றுக்கணக்கான பக்கங்கள் இருக்கும் நிலையில் அதற்கு விளக்கமளிக்கும் முன்னர் விரிவான ஆய்வு தேவைப்படும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேர்தல் நிதியை சீர்திருத்தும் முயற்சிகளை மேற்கொண்டது. 
 
தேர்தல் பத்திரங்கள் அறிமுகமும் அதன் ஒரு பகுதிதான். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆளும் அரசுக்கு லஞ்சம் வழங்க இந்த தேர்தல் பத்திரங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது அதீத கற்பனை.
 
மேலும் ஊழல் மற்றும் லஞ்சத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்த உரிமை கிடையாது’ என்றார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதல் மனைவி இறந்துவிட்டதாக நினைத்து கணவன் தற்கொலை! – காதலர் தினத்தில் நடந்த சோகம்!