பெங்களூரில் தமிழ் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் பாஜக அந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி பகுதியில் சேர்ந்த 37 வயது பெண் கடந்த 19ஆம் தேதி பெங்களூருக்கு வந்த நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து அவர் தனது சகோதரர் வசிக்கும் வீட்டுக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது வந்த இரண்டு ஆண்கள் அவரை அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்றதாகவும், அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது.
மேலும் அவர் அணிந்திருந்த தங்க செயின் உள்ளிட்ட நகைகளையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் விசாரணை செய்தனர். இதில் கூலி வேலை செய்யும் கணேஷ், சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்திருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு பாஜக போராடி வரும் நிலையில் முதல்வர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை பாஜக அரசியல் ஆக்க வேண்டாம் என்றும், பாஜக ஆட்சியில் பலாத்காரம் நடக்கவே இல்லையா என்றும், ஒரு சில மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள் என்றும், அனைத்தையும் அரசியலில் ஆக்கிப் பார்க்கும் பார்வையை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.