Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமனம்!

பாஜக மாநிலங்களவை குழு தலைவராக பியூஷ் கோயல் நியமனம்!
, புதன், 14 ஜூலை 2021 (15:51 IST)
பாஜக மாநிலங்களவை குழுத் தலைவராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது
 
பாஜகவில் சமீபத்தில் 42 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர் என்பதும் ஒரு சில அமைச்சர்கள் பதவியில் இருந்து விலகி கட்சி பதவிகளிலும், கவர்னர் உள்ளிட்ட பதவிகளிலும் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஜக மாநிலங்களவை தலைவராக இருந்த தாவர் சந்த் கெலாட் என்பவர் கர்நாடக மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து தற்போது பாஜக மாநிலங்களவை குழுத் தலைவராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!