உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தாஜ் மகோட்சவம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா ராம லீலாவுடன் துவங்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விழா பிப்ரவரி 18 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 27 ஆம் தேதி முடிவடைகிறது. இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ராம் நாய்க் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் பாஜக எம்பி வினய் கதியார், தாஜ் மஹால் விரைவில் தேஜ் மந்தீர் ஆகும் என கூறியுள்ளார். தாஜ் மற்றும் தேஜ் இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்ற அவர் தாஜ் மஹால் தேஜ் மந்திராக விரைவில் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த விழாவிற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பாஜக எம்பி-யின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.