உதயநிதி ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து அந்த தொகுதிகள் போட்டியிடுவேன் என சிறையிலிருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் வழக்கு ஒன்றுக்காக சிறை சென்ற சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலையான நிலையில் அவர் ஒரு சில ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது தான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம் என்றும் எனக்கு ஒரு சில அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
ஆனால் அரசியல் கட்சி தொடங்குவது என்பது ஒரு பெரிய பணி என்றும் அது இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்றும், அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று தெரிவித்தார்
மேலும் தனக்கு அதிமுக பாஜக உள்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என்று நம்புவதாகவும் உதயநிதி ஸ்டாலினை என்னால் தோற்கடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது